சமுதாயத்தில் 'ரோல் மாடலாக' ஆசிரியர்கள் இருக்க வேண்டும்
மதுரை: ""கல்லூரி ஆசிரியர்கள் சமுதாயத்தில் "ரோல் மாடலாக' இருக்க வேண்டும்,'' என, மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கல்யாணி பேசினார்.
இப்பல்கலையில், யு.ஜி.சி., மற்றும் கல்வியாளர் மேம்பாட்டு கல்லூரி சார்பில் "கல்லூரி ஆசிரியர்களுக்கான 65வது ஆற்றுப்படுத்துதல்' நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. தலைமை வகித்து துணைவேந்தர் கல்யாணி பேசியதாவது:ஆசிரியர்களுக்கு அறிவு தாகத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பாராட்டுக்குரியது. ஆசிரியர் தொழிலுக்கு வந்தவுடன் ஒவ்வொருவரும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற இலக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் சமுதாயத்துக்கும்,
எதிர்கால தலைமுறையினருக்கும் ஒரு "ரோல் மாடலாக' இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு அவர்களின் குடும்ப வளர்ச்சியில் இருக்கும் அதே பொறுப்புணர்வு சமுதாய மேம்பாட்டிலும் இருக்க வேண்டும். உண்மையாக உழைத்தால் அதற்கு உரிய பலன் நிச்சயம் கிடைக்கும், என்றார். இயக்குனர் மும்தாஜ் பேகம் வரவேற்றார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து கடந்த ஒரு மாதமாக பயிற்சி பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் 34 பேருக்கு சான்றிதழ்களை துணைவேந்தர் வழங்கினார். உதவி பேராசிரியை விஜயா நன்றி கூறினார்.

http://www.dinamalar.com/district_detail.asp?Id=485480
No comments:
Post a Comment